கடந்த 46 ஆண்டு காலமாக கையெழுத்து பிரதியாக வெளிவரும் பல்சுவை இலக்கிய இதழ் “தாழம்பூ” . இதன் 400-வது இதழ் வெளியீட்டு விழா திருச்சியில் நடந்தது. மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமை இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
400வது தாழம்பூ பல்சுவை இலக்கிய இதழை ஆசிரியர் எம்.எஸ்.கோவிந்தராஜன் வெளியிட , மக்கள் சக்தி
இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் பெற்றுக்கொண்டார். மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கையெழுத்து முலம் 1977 முதல் தொடர்ந்து நடத்தி வரும் தாழம்பூ இதழ் ஆசிரியர் எம்.எஸ். கோவிந்தராஜனை பாராட்டி, வாழ்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.