Skip to content
Home » தஞ்சையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் கூடுதல் கட்டிடம் திறப்பு…

தஞ்சையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் கூடுதல் கட்டிடம் திறப்பு…

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே உயர்நீதிமன்றம் நீதிபதிகள் விருந்தினர் மாளிகை கடந்த 2020-ம் ஆண்டு கட்டி திறக்கப்பட்டது. இதையடுத்து இங்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வளாகத்தில் கூடுதல் கட்டிடம், கார் நிறுத்துமிடம், தரைதளம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் ரூ. 79 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சுப்ரமணியன், சுரேஷ்குமார், ஆதிகேசவலு, சரவணன், மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெசிந்தாமார்ட்டின் வரவேற்றார். விழாவில் சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி (பொ) டி. ராஜா கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார். விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை நீதிபதிகள் இந்திராணி, சுந்தர்ராஜன், மலர்விழி, முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகவேலு, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் ரகு, ஒப்பந்தக்காரர் சோமசுந்தரபாரதி, வக்கீல் சங்க தலைவர் அமர்சிங், செயலாளர் சசிகுமார் மற்றும் நீதிபதிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *