கரூர் மாவட்டம், தமிழகத்தில் பழனிக்கு அடுத்தபடியாக தைப்பூசம் சிறப்பாக நடைபெறும் கோவில் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில், இக்கோவில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது, குபேர திசை என போற்றப்படும் வடக்கு திசை நோக்கி கோவில் வாசல் அமைந்திருப்பதால் காசி திருத்தல பெருமையை காட்டிலும் மிஞ்சிய அருள் வழங்கும் சிவாலயம் என்று வரலாற்றில் புகழ்பெற்ற கோவிலாகும்,. இந்த சிறப்புமிக்க கோவிலில் தை 21ஆம் தேதி அன்று வருடாந்தோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம்,
இதனைத் தொடர்ந்து நேற்று கடம்பர் கோவில் முற்றில்லா முலையம்மை உடனுறை கடமனேஸ்வரர் திருக்கோவில், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியுனேஸ்வரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்திய ஜிணேஸ்வரர், அய்யர் மலை சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திர மௌலீஸ்வரர், வெள்ளூர் சிவகாமி உடனுறை திருக்காமேஸ்வரர், கருப்பத்தூர் சுகந்த குந்தாளம்பிகை உடனுறை சிம்மபுரீஸ்வரர் ஆகிய கோவில்களில் இருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வாகனங்களில் ஊர்வலமாக வந்து குளித்தலை கடும்பனேஸ்வரர் கோவில் பின்பகுதியில் எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்பு நடைபெற்றது, தொடர்ந்து காவிரி ஆற்றில் அஸ்திர தேவர்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியாக எட்டு ஊர் கோவில் சிவாச்சாரியார்கள் தங்கள் கையில் சூலாயுதத்துடன் தண்ணீரில் மூழ்கி தீர்த்தவாரி நடைபெற்றது,
தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட பந்தலில் எட்டு ஊர் சாமிகள் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது, இன்று சுவாமி சந்திப்பு மற்றும் தீபாராதனை, சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று குளித்தலை பேருந்து நிலையத்தில் 5 சாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சுமார் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர், விழாவில் கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கரூர் ஏ டி எஸ் பி கண்ணன், டி எஸ் பி ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,
தைப்பூச விழா கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மிக சிறப்பாக நடைபெற்றது, மக்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்..