Skip to content
Home » தை மாத ராசிபலன்கள்…. (15.01.2023 )

தை மாத ராசிபலன்கள்…. (15.01.2023 )

 மேஷம்

வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே… இந்த மாதம் நீங்கள் சூப்பரான பலன்களை அள்ள போகிறீர்கள். தைரியமாக தொழிலில் முதலீடு பண்ணுங்கள். மடைதிறந்த வெள்ளம் போல் லாபம் வந்து சேரும். காதல் கத்தரிக்காயின்னு மனதை அலைபாய விடாதீங்க. ஏதாவது சிக்கலில் மாட்டினா கம்பி எண்ண வேண்டிய கட்டாயம் வரும்.  கூட இருந்து உங்களுடைய குரல்வளையை கடிக்க நினைக்கிற உறவுக்காரங்களை ஒதுக்கி தள்ளுங்க. அடுத்தவர் விஷயத்துல தலையிடாதீங்க. உங்க மேல எஃப் ஐ ஆர் விழுகிறதுக்கு வாய்ப்பு இருக்கு. திடீர் தன யோகம் உண்டு. 

ரிஷபம்

கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே…. தகப்பனார மருத்துவமனையில் சேர்த்து அல்லல் பட போறீர்கள். பங்கு பரிவர்த்தனை விஷயத்துல ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.   பணம் நகைகளை வீட்டில வைக்காதீர்கள் . மீறி பண்ணுனீங்கன்னா திருடர்களுக்கு தான் யோகம்.  கூட்டுத் தொழில் உங்க நல்ல உறவுக்கு வேட்டுவைக்கும். இழுபறியா பேச்சுவார்த்தையில் இருந்த திருமணத்த நடத்தி வைப்பீர்கள்.   பிள்ளைகள் விஷயத்துல கண்காணிப்பா இருக்க வேண்டும். இல்லைன்னா உங்கள கஷ்டப்படுத்தாமலேயே கல்யாணம் வரைக்கும் போயிருவாங்க.  

 

மிதுனம்

எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே… வேலைக்குப் போற இடத்துல ரொம்ப கட்டுப்பாடாக நடக்கணும்ங்க. தேவையில்லாத பழக்கங்களை ஏற்படுத்துனா அவமானங்கள் அடுக்கடுக்க வருமுங்க. குடிக்கிற பழக்கம் குடும்பத்துக்கு ஆகாதுங்க. அப்புறம் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுட்டு நடுத்தெருவுல நிப்பீங்க. வியாபாரம் ஓஹோன்னு நடக்குமுங்க. பழைய கடன்களை அடைப்பீங்க. பஸ்ஸில் போகும்போது கூட பக்குவமா நடந்துக்குங்க. சில்மிஷம் பண்ணினா முதுகுல டின்னு கட்டிருவாங்க. உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியமுங்க. அலட்சியமா விட்டீங்கன்னா அறுவை சிகிச்சையில போய் நிக்குமுங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

 

கடகம்

வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே… மனைவி பிள்ளைங்கள மகிழ்ச்சிப்படுத்த ஆடம்பரமாக செலவு செய்வீர்கள்.  அதுக்காக அகலக்கால் வெச்சீங்கன்னா இருக்கிற வீட்டை விக்கக்கூடிய நிலை வரும்.    ஏதாவது குலதெய்வ நேர்த்திக்கடனோ கோயிலுக்கு வேண்டுதலோ இருந்தா நிறைவேற்றுங்கள். நம்பி யாருக்கும் காசு கொடுக்காதீர்கள். அதனால பணத்தை இழக்கிறது மட்டும் இல்லாம கோர்ட்டுக்கு அலைய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வாகனங்களில் போகும் போது ஜாக்கிரதையாக செல்லவும் .

சிம்மம்

அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே… வியாபாரத்திற்கு இருந்த எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள். பணத்தை புதிய தொழிலில் முதலீடு செஞ்சு மத்தவங்க மூக்குல விரலை வைக்கிற மாதிரி நிமிர்ந்து நிப்பீங்க. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை விருத்தி  செய்வீர்கள்.  கத்தி முனையில் பணத்தைபறித்து சென்றுவிடுவார்கள். காதலிச்சு வீட்டை விட்டு ஓடி வந்த ஒரு ஜோடிக்கு உங்க தலைமையில் கல்யாணம் செய்து வைப்பீர்கள்.  

கன்னி

அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே… அடுத்த வீட்டுக்காரர்களோடு வம்பு வழக்கு வச்சுக்காதீர்கள்.   நீங்க எதிர்பார்த்து போற சில காரியங்கள் தடங்கலா முடியும் . இடம் வாங்கி விற்கும் வேலையில எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  போலியான பத்திரத்தை காட்டி உங்களை ஏமாளி ஆக்குற நிலைக்கு ஆளாகாதீர்கள். வியாபாரம் சுமாராக நடக்கும் . இழுபறியாய் இருந்த கல்யாண பேச்சை முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.  கர்ம வினையால தாயாருக்கு இருந்த நோய் கொஞ்சம் கொஞ்சமா விலகும். விவசாய தொழில்ல செலவு அதிகமாக வந்து சிரமப்படுத்தும்.  

துலாம்…

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே… கொழுப்பு சம்பந்தப்பட்ட எந்த உணவையும் சாப்பிடாதீர்கள். இருதய அடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பண்ணுற நிலை வரலாம். வியாபாரத்தில் தில்லு முல்லு அறவே ஆகாதுங்க. அப்புறம் இருக்கிறதை இழந்துட்டு அம்போன்னு நிப்பீர்கள்.  அரசாங்க ஊழியர்களுக்கு அவஸ்தை அதிகமாகும்.  சகல சௌபாக்கியங்களும் உண்டு.

விருச்சிகம்..

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே… பொருளாதாரம் முன்னேற்றத்திற்காக புதுப்புது யோசனைகளை வியாபாரத்தில் புகுத்துவீர்கள்.  வசீகரமாக பேசி வாடிக்கையாளர்களை இழுத்து லாபத்தை அதிகரிப்பீர்கள். குடும்ப உறவில் எச்சரிக்கையாக இருங்கள். கும்மாங்குத்து நடவடிக்கையில் இறங்கினால் விவாகரத்து நோட்டீஸ் வீட்டுக்கு வந்து சேரும். வெட்டித்தனமாக வெளியூரில் அலையாதீர்கள். அதனால கை காசு மட்டும் தான் செலவழிம். புது வீடு கட்ட முயற்சி செய்வீர்கள்.  அதற்கான நடவடிக்கையில் இறங்கி வெற்றியும் தருவீர்கள்.  குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மருத்துவ செலவு பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  கழனி செழித்து செல்வம் பெருகும்.  

தனுசு..

வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே…

அரசாங்க கடன்களை தவணை தவறாமல் கட்டிவிடுங்கள்.  வியாபாரம் மந்தமாகத்தான் நடக்கும்.  எந்த சூழ்நிலையிலும் அடுத்தவங்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.  வண்டி வாகனங்கள் திடீர் திடீர்னு செலவு வைக்கும். நீண்ட காலமாக கோர்ட்டில்  நடந்த வழக்கு முடிவுக்கு வரும்.  உறவினர்கள் உங்களுக்கு எதிர்ப்பா நடப்பார்கள்.  தொட்டதெல்லாம் துலங்கும்.

மகரம்…

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே….

உங்களுக்கு நீங்களே எதிரியாகிற நிலை ஏற்படலாம். வார்த்தை அளந்து பேசுங்கள்.  தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைக்காதீர்கள். அடுத்த வீட்டு பஞ்சாயத்துக்கு முன்னாடி நிக்காதீர்கள். இதையெல்லாம் உங்களுக்கு கெட்ட பேர மட்டும் இல்லாம குடும்பத்துல சிக்கலையும் கொண்டு வந்து சேர்க்கும். வியாபாரத்துல பக்குவமா நடந்து கொள்ளுங்கள்.  ஆட்டம் போட்டா நஷ்டத்துல போயி நிப்பீர்கள். தொழில் காரணமா சிலர் வெளிநாடு போவார்கள்.  அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு இடம் மாறுதல் கிடைக்கும். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். 

கும்பம்…

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே… அவசரப்பட்டு தொழில்ல அதிகமா முதலீடு செய்யாதீர்கள்.  வியாபாரம் சீராக நடக்கும். கூட்டுத்தொழில் கொஞ்சம் பிரச்சனையை கொண்டு வரும். பெத்தவங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்க உடம்ப பாத்துக்கொள்ளுங்கள். ஆஸ்துமா போன்று நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்குது.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.   ஆயுள் விருத்தியாகும்.

மீனம்…

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே… இந்த மாதம் தொழில் வியாபாரம் ஆகியவற்றில் லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். அரசாங்க வேலையில் இருப்பவர்கள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெறுவார்கள். தனியார் துறை ஊழியர்களுக்கும் இது யோகமான காலகட்டம்.  நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்த நோய் விலகும்.  முழங்கால் வலி கை கால் வலி உள்ளவங்களுக்கெல்லாம் நிவாரணம் கிடைக்கும்.  திடீர் யோகம் அடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. தொழில் விருத்தி அடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!