திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (50). இவர் இன்று மாலை பட்டா பெயர் மாற்ற கண்ணன் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கினார். அப்போது தாலுகா அலுவலகத்தில் மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.