Skip to content
Home » ஆதி திராவிட மாணவர்கள்….. போட்டி தேர்வுக்கு தாட்கோ பயிற்சி

ஆதி திராவிட மாணவர்கள்….. போட்டி தேர்வுக்கு தாட்கோ பயிற்சி

  • by Senthil

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தாட்கோ சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்  கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை (Chartered Account- Intermediate), நிறுவன செயலாளர் -இடைநிலை (Company Secretary Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை (Cost and Management Account- Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை (Chartered Account- Intermediate), நிறுவன செயலர் இடைநிலை (Company Secretary Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை (Cost and Management Account Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற விரும்பும் மாணயாக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் (www.tahdco.com) பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!