வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் ஏற்கனவே டி20 போட்டியில் 2-1 என்ற நிலையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அடுத்ததாக இந்திய அணி அங்கு 2 டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. முதல்டெஸ்ட் போட்டி சாட்டோகிராமில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. முதலில் இந்திய அணி பேட் செய்து 404 ரன்களை குவித்தது. அடுத்ததாக ஆடிய வங்க தேசம் 150 ரன்னில் சுருண்டது. இதைத்தொடர்ந்து இந்தியா 2வது இன்னிங்சை ஆடியது. 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய வங்க தேசம் நேற்று ஆட்ட நேரம் முடியும் வரை 6 விக்கெட் இழந்து 272 ரன்கள் சேர்த்தது. 5ம் நாளான இன்று காலை ஆட்டத்தை தொடங்கிய வங்க தேசம் 1 மணி நேரத்திற்குள் எஞ்சிய 4 விக்கெட்டையும் இழந்தது. ஆட்ட நேர முடிவில் வங்க தேசம் 324 ரன்களை எடுத்தது.
இதனால் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.