உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் அடித்த 31 வது சதம். தொடர்ந்து ஹெட் மற்றும் ஸ்மித் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 361க்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.
ஸ்மித்துக்கு ஜோடியாக கிரீன் களமிறங்கினார். அவர் 6 ரன்னில் சமி பந்தில் அவுட் ஆனார். பின்னர் ஸ்மித் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில்ஆஸ்திரேலியா 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்தது.