பெர்த் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது. அதைத்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதன் மூலம் முதலிடத்தை இழந்த இந்தியா, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
1. இந்தியா – 61.11 சதவீதம் 2. ஆஸ்திரேலியா -57.69 சதவீதம் 3. இலங்கை – 55.56 சதவீதம், . நியூசிலாந்து – 54.55 சதவீதம் 5. தென் ஆப்பிரிக்கா – 54.17 சதவீதம் 6. இங்கிலாந்து – 40.79 சதவீதம் 7. பாகிஸ்தான் – 33.33 சதவீதம் 8. வங்காளதேசம் – 27.50 சதவீதம் 9. வெஸ்ட் இண்டீஸ் – 18.52 சதவீதம்