காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நேற்று பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகளை விட்டு விட்டு ஆண்களை மட்டும் சுட்டுத்தள்ளினர். வழக்கமாக இது போன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தான் நடத்துவார்கள். தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் பாகிஸ்தானுக்குள் சென்று பதுங்கி கொள்வார்கள்.
நேற்று காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதலும் இதே பின்னணியில் தான் நடந்திருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் இன்று அறிவித்து உள்ளார். காஷ்மீர் சம்பவத்திற்கு எதிர்வினையாக இந்தியா தங்கள் மீது தாக்குதல் நடத்திவிடலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் தானாக முன்வந்து இந்த விளக்கத்தை அளித்து உள்ளது.