Skip to content

ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

சென்னை ராமாபுரம் கொத்தாரி நகர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது தீ மள மள வென பரவி அடுத்தடுத்து பர்னிச்சர் குடோன், பஞ்சு குடோன், கார் மெக்கானிக் கடை என முழுவதிலும் தீ பரவி கொழுந்து பயங்கரமாக எரிய தொடங்கியது. இதனால் ராமாபுரம் முழுவதிலும் கரும்பு வகைகள் விண்ணை மட்டும் அளவு சூழ்ந்து இருள் சூழ்ந்து காட்சி அளித்தது. பின்னர் இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் ராமாபுரம் கோயம்பேடு மதுரவாயில் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் தண்ணீரை பீச்சி அடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் குடோன் முழுவதிலும் தீப்பிடித்து எரிந்து வருவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனால் பகுதி பொது மக்களுக்கு மூச்சு திணறல் கண்ணெரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது சதி வேலையா என்ற கோணத்தில் ராமாபுரம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!