திருச்சி மாவட்டம் சமயபுரம்மாரியம்மன் திருக்கோயில்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தலமாகவும்,சக்தி ஸ்தலங்களில் முதன்மையாகவும் விளங்குகிறது. இந்த கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. எட்டாம் திருநாளான இன்று உற்சவர் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யபட்டு மகா தீபாதாரனை நடந்தது. பின்பு வெள்ளி குதிரையில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து திருக்கோயில் உட்பிரகாரத்தில் அம்மன் உலா நடைபெற்றது.இவ்விழாவில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இன்று இரவு சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் உள்ள தெப்பத்தில் மாரியம்மன் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள் . இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சமயபுரம் வருவார்கள்.