தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ சுரண்டை – வாடியூர் சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணிதத ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60)ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக தென்காசி, ஆலங்குளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அஙு்கு மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆனது.