திருச்சி, மாநகரம் மற்றும் மணப்பாறையில், மணப்பாறை நகராட்சி அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு பரவுவதை தடுக்கும் விதமாக கொசு மருந்து அ டிக்கும் பணியை துவங்கியுள்ளனர். மேலும், கொசு புழு ஒழிப்பு, நிலவேம்பு கஷாயம் வழங்குதல், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் குளோரினேஷன் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையாளர் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.