பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62ஆம் தேசிய மருந்தியல் வாரவிழா 20தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் மற்றும் தந்தை ரோவர் ஹான்ஸ் கல்வி நிறுவனர் வரதராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பின்னர் ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, கடைவீதி தெரு, வானொலி திடல், காமராஜர் வளைவு என முக்கிய வீதிகளில் டெங்கு விழிப்புணர்வு பேரணியை மாணவிகள் கோசமிட்ட வாரு சுற்றி வந்து ரோவர் பள்ளியில் இப்பரணி முடிவுற்றது இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் என பல்வேறு அமைப்பு சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.