திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆழத்துடையான் பட்டி பகுதியில் அமைந்துள்ளது சோமநாத சௌந்தரவல்லி அம்பாள் திருக்கோவில். இக்கோவிலானது கிபி 9ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் புத்திர பாக்கியம் வழங்கும் பரிகாரத்தலமாக அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக சுமார் 65 ஏக்கர் நஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலத்திலிருந்து வரும் வருவாய் மூலம் கோவில் அர்ச்சகர் மற்றும் திருமாலைக்கட்டி வழங்குபவர்கள். இசைக்கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது கோவில் நிலத்தை வருவாய்த் துறையினர் மூலம் தனி நபர்கள் தங்களது பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியுள்ளதால் கோவிலுக்கு வரும் வருவாய் நின்று விட்டதாக தெரிகிறது.
இதனால் கடந்த ஒரு வருட காலமாக கோவில் அர்ச்சகருக்கு ஊதியம் வழங்கவில்லை என்றும், கடந்த நான்கு தலைமுறையாக பணியாற்றி வரும் திரு மாலை கட்டி வகையறாவிற்கும் ஊதியம் வழங்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் அர்ச்சகர் கடந்த
ஒரு வாரங்களுக்கு முன்பு தான் கோவிலுக்கு அர்ஜனனை செய்ய வர வில்லை என்று கோயிலை பூட்டி சாவியை முசிறி அறநிலைத்துறை அதிகாரிகள் இடம் ஒப்படைத்ததாகவும் தெரிகிறது. சுதாரித்துக் கொண்ட அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக தங்களது சொந்த பணத்தை அர்ச்சகருக்கு கொடுத்து மீண்டும் கோவிலை திறந்து பூஜைகள் நடைபெற ஏற்பாடுகள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோயில் நிலத்தை கொள்ளையடித்த நபர்கள் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்காவது தங்களால் முடிந்த உதவியை செய்து இருக்கலாம் என்றும். புகழ் பெற்ற திருக்கோவில் நான்கு நாட்களாக மூடி இருப்பது வேதனைக்கு உரிய விஷயம் என்றும் சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்.