11ம் வகுப்பு பள்ளி மாணவன் மாயம்…
.
திருச்சி சஞ்சீவி நகர் சூரியகாந்தி பூ தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது48) இது மகன் இஸ்ரேல் அர்னால்டு (வயது16) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 31ந் தேதி திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அன்று வெளியே சென்ற இஸ்ரேல் அர்னால்டு மயமானனார். இதுகுறித்து அவரது தந்தை ஜோசப் பள்ளி தப்புகாரன் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்டரின் தொழிலாளி சாவு…
திருச்சி திருவரங்கம் வேலூர் ரோடு செட்டி தோப்பு சேர்ந்தவர் வடிவேல் (வயது 40) சென்டரிங் வேலை செய்து வந்தார். நேற்று செட்டித்தோப்பு பாலம் மேல் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக வடிவேலு பாலத்தில் இருந்து கீழே விழுந்தார் இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் அவரை மீது திருவரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பரிசோதித்த டாக்டர்கள் வடிவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது உறவினர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் கஞ்சா விற்ற பெண்கள் கைது…
திருச்சி பஞ்சப்பூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்ற திருச்சி புங்கனூர் காந்தி நகரைச் சேர்ந்த மதிவண்ணன் மனைவி ரமணி 60 என்ற மூதாட்டியை கைது செய்தனர். இதேபோல் திருச்சி திண்டுக்கல் சாலை கோரையாறு அருகே கஞ்சா விற்ற சந்துரு மனைவி யசோதா (வயது50 )என்ற மூதாட்டியை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் தலா 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் புகையிலை விற்ற வாலிபர் கைது…
திருச்சி கண்டோன்மென்ட் அருகே அரசால் தடை விதிக்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசாரங்கள் சோதனை மேற்கொண்டனர் அப்போது ஒரு டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒயில் (வயது 32 | என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து 240 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது அதோடு அவருடன் இருந்த ராஜ பூபதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு..
உறையூரில் சாலை பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாலைப் பிள்ளையார் கோவில் உள்ளது.நிலையில் நேற்று இரவு கோவில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் இந்நிலையில் இன்று காலை கோவிலை திறக்க வந்த பொழுது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்ட அதிலிருந்து உண்டியலில் உடைக்கப்பட்ட இருப்பது தெரியவந்தது.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக ஒரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த 2 பேர் கைது
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவானைக்காவல் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் காரில் அவர் அருகாமையில் வந்து இறங்கினர். பின்னர் அந்தப் பெண்மணி இடம் பேச்சு கொடுத்து,
நூதன முறையில் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னையைச் சேர்ந்த சதீஷ் ரமேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.