கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு …. 13 வயது சிறுவன் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாவடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் கம்பத்தடியான் ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று கோவில் பூசாரி ஜெகநாதன் பூஜை முடிந்தபின் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பூஜை சாமான்கள் மற்றும் பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து ஜெகநாதன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் 13 வயது சிறுவன் கோவில் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது. பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
வாலிபர் தற்கொலை…
திருச்சி கருமண்டபம் வசந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ஆனந்த் ( 32). திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது .இவரது மனைவி ஆனந்தி. 6 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். ஆனந்த் குடிப்பழக்கம் உடையவர் .கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் பணம் கொடுத்து தனது மனைவியை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.இந்நிலையில் ஆனந்த் வீட்டில் யாரும் இல்லாத போது அறையை பூட்டிவிட்டு மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் அன்னக்கொடி கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் விரைந்து சென்று ஆனந்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
பூஜை அறையில் வாலிபர் தற்கொலை
திருச்சி சிந்தாமணி அண்ணா நகர் பூசாரி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் காளிமுத்து. இவருக்கு திருமணம் ஆகி 41/2 ஆண்டுகள் ஆகிறது .கஜலட்சுமி என்கிற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த அவர் குடி போதைக்கு அடிமையாகி விட்டார், சம்பவத்தன்று அவரது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது கோவிலுக்கு சென்று வரலாம் என தனது மனைவியை காளிமுத்து அழைத்துள்ளார். அவர் இரண்டு நாட்களில் வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டில் பூஜை அறையில் யாரும் இல்லாதபோது சேலையால் காளிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி கஜலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகிறார்.