Skip to content
Home » கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

கோவிலில் அகல்விளக்கு தீ ……சுடிதாரில் பிடித்து பள்ளி மாணவி பலி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஹேமாவதி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கடந்த மே மாதம் 14-ந் தேதியன்று ஹேமாவதி அதேப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கோவிலில் இருந்த அகல் விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ எதிர்பாராத விதமாக ஹேமாவதியின் சுடிதாரில் பற்றியது. இதை ஹேமாவதி கவனிக்காததால் தீ அவரது உடலில் பரவியது. வலி தாங்காமல் ஹேமாவதி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஹேமாவதி உடலில் பற்றிய தீயை அணைத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஹேமாவதியின் தந்தை அண்ணாமலை மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *