மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சாமி நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா நோய் பெரும் தொற்று காலம் முழுவதற்குமான அடிமனை வாடகையை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும், 2016 ஆம் ஆண்டு முதல் 34 ஏ அடிப்படையில் பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை குறைத்திட வேண்டும் அரசாணை எண் 456/207, 2007 298/2010 அடிப்படையில் வாடகை நிர்ணயிக்க வேண்டும், கோயில் இடங்களில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவர்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்ட அரசாணை 318 உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அறநிலைய சட்டப்பிரிவு 34 இன் படி பல தலைமுறைகளாக குடியிருப்பவர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அந்தந்த இடங்களுக்கு நியாயமாக விலையை தீர்மானித்து அவர்களுக்கு சொந்தம் ஆக்கிட வேண்டும் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ. ஐ.கே எஸ் மாவட்டத் தலைவர் சிம்சன், மாநில குழு குணசுந்தரி, மாவட்ட செயலாளர் விஜய் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.