அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்து தண்டலை அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தமிழரசி (45).விவசாய கூலி., இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருக்காலங்குறிச்சியில் கோவில் திருவிழாவின் போது கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அதனை வேடிக்கை பார்க்க வந்த உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த குமார் மகன் தனுஷ் (22) முருகேசன் மகன் கலைமணி (20 )ஆகிய இருவரும் தமிழரசியின் வீட்டின் முன்பு உட்கார்ந்து கொண்டு வீன் தகராறு செய்தும் வீட்டின் முன்பு இருந்த பிளாஸ்டிக் சேரை உடைத்தும் தமிழரசியை அசிங்கமாக திட்டி குச்சியால் அடித்தும் மிரட்டி சென்றனர்.இதுகுறித்து தமிழரசி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து தனுஷ் கலைமணி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
