கோவை, வீரகேரளம் அருகே பொங்காளியூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு மரியம்மன் கோவில் உள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல் உடைத்து பணத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது…
கோவை பொங்காளியூர் சுற்று வட்டார பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பொதுமக்கள் சார்பாக கோவை, வீரகேரளம் வழியாக தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சுற்றிலும் சுற்றுச் சுவர இன்று திறந்தவெளியில் உண்டியல் வைத்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் கோவிலை நோட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணத்தை திருடி சென்றனர். கோவில் பூசாரி மற்றும் பொதுமக்கள் கோயில் உண்டியலில் திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வடவள்ளி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பெயர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவில் சார்பாக வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 24.9.2024 அன்று நேற்று முன்தினம் இரவு 1.40 மணி அளவில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்து செல்வது பதிவாகி இருந்தது.
மேலும் இதே போன்று பி.என் புதூர் பகுதியில் உள்ள ஆர்.ஜி வீதியில் சக்தி விநாயகர் கோவில் உண்டியல், அதற்கு முன்தினம் கல்வீரம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் உண்டியல், விநாயகர் கோவில், ஐயப்பன் கோவில் உண்டியகள் உடைக்கப்பட்டது. மேலும் லாலி ரோடு சங்கிலி கருப்பராயன் கோவில் உண்டியல் என தொடர் கோவில்களின் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை திருடி சென்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
மேலும் தற்பொழுது கிடைத்து உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து தொடர்ந்து கோவில்களை குறி வைத்து திருடும் கும்பலை கோவை வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.