Skip to content
Home » குடியரசு தின விழா…. தெலங்கானா முதல்வர் புறக்கணித்தார்

குடியரசு தின விழா…. தெலங்கானா முதல்வர் புறக்கணித்தார்

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டது.

இதனால் இந்த ஆண்டும் கொரோனாவை காரணம் காட்டி செகந்திராபாத்தில் குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. இதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில அரசு சார்பில் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் ராஜ் பவனில் தனியாக குடியரசு தின விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் தற்போது கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில் மாநில அரசு வேண்டும் என்றே கவர்னரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை ரத்து செய்துள்ளது எனவே குடியரசு தின விழாவை நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

அவரது வழக்கை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட்டு வழக்கம்போல் குடியரசு தின விழாவை செகந்திராபாத்தில் நடந்த வேண்டுமென உத்தரவிட்டது. இருப்பினும் இன்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் சந்தரசேகர ராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சந்திரகுமாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *