பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன்(82). இவர் தமிழில் எம்.ஜி.ஆருடன் நாளை நமதே படத்தில் நடித்தார். தமிழில் அவருக்கு இதுவே முதல் படம். சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன் ஐதராபாத் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்கு நாளை மறுதினம் நடைபெறுகிறது. இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 942 படங்களில் நடித்துள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளர் கே. விஸ்வநாத்தின் உறவினர் சந்திரமோகன். இவர் ஒரு வேளாண் பட்டதாரி.
