தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், ஏரியில் கவிழ்ந்து 5 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று இரவு காரில் புறப்பட்டு வெளியூர் சென்று கொண்டிருந்தனர். யாதார்திரி புவனகிரி மாவட்டம் ஜலால்பூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், ஏரியில் கவிழ்ந்து விபத்தானது . இந்த விபத்தில் 6 பேரில் மணிகண்டா என்பவருக்கு மட்டும் நீச்சல் தெரிந்ததால் அவர் ஏரியில் இருந்து வெளியேறி உயிர்தப்பினார்.