திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங், குற்ற வழக்கில் விசாரணைக்கு வந்த 10க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கி அவர்களது பல்லை பிடுங்கி விட்டு உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இந்த நிலையில் பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த பிரச்னை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்பிடுங்கிய புகாரைத்தொடர்ந்து, ஏஎஸ்பி பல்வீர்சிங்கை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றார். எனவே பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் மீது உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை அறிக்கை வந்ததும் உரிய மேல் உடவடிக்கை எடுக்கப்படும், காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது என்றார்.