கேரள மாநிலம் வயநாடு அடுத்துள்ளது குப்பக்கோலி. இந்த பகுதியை சேர்ந்தவர் சலீம் (20). இவர், அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அப்போது சலீம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சலீமை மீட்டு அம்பலவயல் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் . மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சலீம் இறந்ததாக தெரியவந்துள்ளது.
உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…
- by Authour
