செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள இருளர் காலணியைச் சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24). இவருக்குக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. திருமணத்திற்கு முன் ராமு அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கையான சரளா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வழக்கமான காதலர்களைப் போல் பல இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து சுற்றியுள்ளனர்.
இந்த தகவல் ராமுவின் பெற்றோருக்கு தெரியவந்தது. சாதாரண காதலையே ஏற்கத் தயங்கும் நிலையில், திருநங்கையைக் காதலித்ததை அவரது பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், காதலைக் கைவிடச் சொல்லி பெற்றோர் கண்டித்தனர். ஆனால், ராமு தனது காதலைக் கைவிடாமல் காதலியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இதையடுத்து, ராமு மீண்டும் திருநங்கை சரளாவுடன் பழகித் தொடங்கினார். இதனால், அவர் தனது மனைவியிடம் சரிவர அன்பு காட்டவில்லை என கூறப்படுகிறது. கணவனின் காதல் குறித்து அறிந்த ராமுவின் மனைவி, இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், சரளாவின் பழக்கத்தை விட்டொழிக்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
