தெலுங்கு சினிமாவில் புஷ்பா நண்பன் கேசவன் எனும் கதாபாத்திரத்தின் மூலமாக மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. 2019ல் வெளியான மலேஷம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நடிகர் ஜெகதீஷ் அதன் பிறகு ஒரிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
2021ல் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த புஷ்பா படத்தில் கேசவன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜெகதீஷ். ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு நெருங்கிய நண்பர் கதாபாத்திரத்தில் நடித்த ஜெகதீஷுக்கு அதன் பிறகு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. முன்னதாக குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடித்து வந்த ஜெகதீஷ் புஷ்பா படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். புஷ்பா படத்திற்கு பிறகு 4 படங்கள் நடித்த ரிலீஸ் ஆன நிலையில், இப்போது புஷ்பா 2 படத்திலும், இன்னும் இரண்டு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ஜெகதீஷ் திடீரென அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஆந்திர மாநில பஞ்சகுட்டா போலீசார் 30 வயது தக்க ஒரு பெண் அவரது இருப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு வழக்கினை பதிவு செய்தார்கள். அதன் அடிப்படையில் தொடர் விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்து கொண்ட அந்தப் பெண்ணும் புஷ்பா படத்தில் நடித்த நடிகர் ஜெகதீஷும் நண்பர்களாக இருந்ததாகவும் ஓரிரு படங்களில் ஒன்றாக நடித்ததாகவும் தெரியவந்தது.
தற்கொலை செய்து கொண்ட ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிகை வேறொரு ஆணுடன் தனியாக இருக்கும்போது அவருக்கே தெரியாமல் நடிகர் ஜெகதீஷ் அவரது செல்ஃபோனில் போட்டோக்களை எடுத்திருக்கிறார். மேலும் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என அந்த பெண்ணை பிளாக்மெயில் செய்ததாகவும் தெரிகிறது.
ஜெகதீஷ் செய்த இந்த செயலால் மனவேதனை அடைந்த அந்த பெண் கடந்த நவம்பர் 29ம் தேதி அவரது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த பெண் தற்கொலைக்கு ஜெகதீஷ் தான் காரணம் என அறிந்ததை அடுத்து நேற்று நடிகர் ஜெகதீஷை கைது செய்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்கொலை செய்து கொண்ட அந்த பெண்ணுடன் ஜெகதீஷ் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் போலீசார் தரப்பிலிருந்து தகவல் வெளியானது. புஷ்பா படத்தின் மூலம் திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று வந்த ஜெகதீஷ் கைது செய்யப்பட்டது தெலுங்கு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.