Skip to content

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை…..

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுவில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான்.இவரது மகன் சல்மான் (22). இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் விளையாடி வந்த நிலையில் சூதாட்டம் விளையாட நண்பர்களிடம் கடனாக பணப்பெற்று விளையாடியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சூதாட்டத்தால் பணத்தை இழந்த விதத்தில் இருந்த சல்மான் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அடுத்து சம்பவம் விரைந்து சென்ற கிணத்துக்கு போலீசார் சல்மான் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!