கரூர் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் தனது தேர்தல் பரப்புரையில் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
கரூர் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் வி.வி. செந்தில்நாதன் இன்று காலை தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு தனது தேர்தல்
பிரச்சாரத்தை கட்சி நிர்வாகிகளுடன் தொடங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் கரூர் பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் தான்தோன்றி மலை சுற்றியுள்ள பொது மக்களிடம் வாக்கு சேகரித்த நிலையில் துப்புரவு தொழிலாளர்களின் காலில் விழுந்து வாக்குகளை சேகரித்தார் தொடர்ந்து தான்தோன்றி மலை மெயின் ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.வி. செந்தில்நாதன் தனது தேர்தல் பரப்புரையை தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் இருந்து தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தேர்தல் பரப்புரையில் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.