2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத 40,000 ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வழக்கு தொடர்ந்த 410 பேருக்கு மட்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பினை கண்டித்தும் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு இன்னொரு நியமனத் தேர்வு என்ற அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்இன்று நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் வடிவேல்சுந்தர், சண்முகம், பிரியா, ஹரிஹரசுதன், ஸ்ரீதர் உட்பட 500கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இன்று காலையிலேயே திருச்சி கலெக்டர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த போராட்டத்திற்காக வெளியூர்களில் இருந்து தேர்ச்சி ஆசிரியர்கள், ஆசிரியைகள் வந்திருந்தனர்.