கரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் .அரசாணை 243ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ,இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.