அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் 33 ஆசிரியர்கள் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அறிவிச்சுடர் விருது வழங்கும் விழா, தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
சிறப்பாக பணியாற்றியதாக தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், மேல்நிலை ஆசிரியர்கள் என 33 ஆசிரியர்களுக்கும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் அறிவுச்சுடர் விருதினை வழங்கி பாராட்டினார்.அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம் நற்சான்றிதழ் வழங்கினார்.
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் பேசும்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு எளிதில் கல்வி கற்றுத் தரும் வகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறிய அளவிலான கணினி வழங்கி வருகிறது. எனவே ஆசிரியர்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்கும் வகையில், சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கூறினார்.