கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 350 க்கு மேற்பட்டோர் கைது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் முன்பு இன்று ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. விடுப்பு எடுத்து இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும், கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 350 க்கும் மேற்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பெண் ஆசிரியர்கள்ஆசிரியைகளும் கைதானார்கள்.
இதுபோல பெரம்பலூரில் 300க்கும் அதிகமான ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள்.