பெங்களூரு மகாலட்சுமி லே – அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி ( 30). இவர், அதே பகுதி பில் மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இந்த பள்ளியில் கடந்த 2023-ம் ஆண்டு ராகேஷ் என்ற தொழிலதிபரிடம் தனது மகனை சேர்த்திருந்தார். அப்போது ராகேஷ், ஸ்ரீதேவி இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் ஸ்ரீதேவி, ராகேசிடம் பள்ளி விரிவாக்க பணிக் காக ரூ.4 லட்சம் கடனாக பெற்றிருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு இந்த பணத்தை ராகேஷ் திரும்ப கேட்ட போது, நீங்கள் பள்ளியில் ஒரு பங்கு தாரராக இருந்து கொள்ளுங்கள் என்று கூறினார். இதை ராகேஷ் நம்பினார். மேலும் ஸ்ரீதேவியுடன் நெருங்கி பழக தொடங்கினார். 2 பேரும் காதல்ஜோடிபோல்வெளியே சுற்றினர். மேலும் ஸ்ரீதேவியிடம் பேச ராகேஷ். தனியாக சிம்கார்டு, செல் போன் வாங்கி பயன்படுத்தி வந்தார்.
வீட்டுக்கு தெரியாமல் ஸ்ரீதேவியுடன், ராகேஷ் பேசியதுடன், ரூம் எடுத்து தங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஸ்ரீதேவிக்கு, சாகர் என்ற வாலிபருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த ராகேஷ், ஸ்ரீதேவியிடம் தான் கொடுத்த கடனை திரும்ப கேட்டுள்ளார்.
அதற்கு ஸ்ரீதேவி, ‘நீங்கள் எனக்கு கொடுத்த ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம் வீதம் கணக்குப்படி பார்த்தால் நான் உங்களிடம் பெற்ற ரூ.4 லட்சம் கடன் தீர்ந்து விட்டது. மேலும் நீங்கள் தான் எனக்கு ரூ.15 லட்சம் தர வேண்டும்’ என்று கூறி னார். இதனால் கோபமடைந்த ராகேஷ், ஸ்ரீதேவியிடம் பேசுவதற்காக வாங்கிய சிம்கார்டு, செல்போனை உடைத்து எறிந்தார். இதனால் ஸ்ரீதே வியால், ராகேசை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி ராகேசின், மனைவியை தொடர்பு கொண்ட ஸ்ரீதேவி, மகனின் பள்ளி சான்றிதழ் உள்ளது. அதை வாங்கிக்கொள்ள ராகேசை அனுப்பும்படி கூறினார். அதன்படி ராகேஷ் சென்றபோது, அங்கு ஸ்ரீதே வியின் காதலன் சாகர், ரவுடி கணேஷ் ஆகியோர் இருந்த னர்.
அவர்கள் ராகேசை மடக்கி பிடித்து, ‘ஸ்ரீதேவியி டம் உல்லாசம் அனுபவித்து விட்டு பணம் கேட்டு மிரட்டுகிறாயா?’ என்று கூறி தாக்கினர். பின்னர் ‘உன் மீது போலீசில் புகார் அளிக்கலாம் வா’ என்று கூறி, அவரை காரில் ஏற்றி சென்றனர். அப்போது கத்திமுனை யில், ராகேசை சிறைபிடித்த அவர் கள். ஸ்ரீதேவியிடம் உல்லாசமாக இருந்ததற்கு ரூ.1 கோடி தர வேண்டும். இல்லையென்றால் நீ, ஸ்ரீதேவியிடம் நெருக்கமாக இருந்த போட்டோ, வீடியோவை உனது குடும்பத்தினர் மற்றும் சோசியல் மீடியாவில் வௌியிடுவோம் என்று கூறி மிரட்டினர்.
இதனால் ராகேஷ் பதற்றம் அடைந்ததும், ரூ.20 லட்சம் கொடுத் தால் போதும் என்று கூறி பேரம் பேசினர். முடிவில் ரூ.1.90 லட்சத்தை ராகேசிடம் இருந்து பறித்துகொண்டு, அவரை விடுவித்தனர். அதன் பிறகும் அவர்கள் 3 பேரும் பணம் கேட்டு தொடர்ந்து ராகேசுக்கு தொல்லை தந்துள்ளனர். . இல்லையென்றால் ஸ்ரீதேவியுடன் நெருக்கமாக இருந்த போட்டோ, வீடியோவை வெளியி டுவதாக கூறி தொடர்ந்து மிரட்டி னர். இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்ப திவு செய்தபோலீசார் ஸ்ரீ தேவி, சாகர்,கணேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.