தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம். இந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்தவர் ரமணி(26). தமிழ் ஆசிரியை இன்று காலை அவர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது . காதலன் மதன் குமார் என்ற இளைஞர் வகுப்பில் புகுந்து ரமணியை கழுத்தில் கத்தியால் சரமாரி குத்தினார். உடனடியாக அவர் தப்பி ஓடினார். ரமணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வகுப்பில் இருந்த குழந்தைகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஆசிரியை ரமணியும், மதன் குமாரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். அவர்களுக்கு திருமணம் நடத்துவது
குறித்து பேசப்பட்ட நிலையில் பெண் வீட்டார் மறுத்து விட்டதால், திருமணம் நடைபெறவில்லை. ஆனாலும் மதன் குமார் ரமணியை மறக்கவில்லை. ரமணி காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்தாரம். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்டு உள்ளார்.
தகவல் அறிந்ததும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். காதலன் ரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியை ரமணி 4 மாதங்களுக்கு முன் தான் வேலையில் சேர்ந்துள்ளார். காதலன் மதன் குமாரும், ஆசிரியையும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள்.