Skip to content
Home » ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

ஆசிரியை கொலை….. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை…. அமைச்சர் மகேஸ் உறுதி

  • by Senthil

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியை  ரமணி (26)  வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது குத்தி  கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது காதலன் மதன்குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து  பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் எஸ்.பி. ஆஷிஷ் ராவத் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.  முதல்வர் உத்தரவின்படி அமைச்சர்கள் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி,  கோவி செழியன் ஆகியோரும் பள்ளிக்கு  விரைகின்றனர்.

.  இந்த சம்பவம் குறித்து  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் கூறும்போது,   குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களின் மீதான வன்முறையை துளியை  சகித்துக்கொள்ள முடியாது.   ரமணியை இழந்து வாடும்  குடும்பத்துக்கும், ஆசிரியர்களுக்கும் எனது ஆழந்த இரங்கல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!