பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருபவர் கான் என்ற ஆசிரியர். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வருகிறார். இதனால் பாட்னாவில் பிரபலமாகதிகழ்ந்து வருகிறார். நேற்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சகோதரிகள் எனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்ட வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள், மாணவிகள், சிறுமிகள் திரண்டு வந்து கான் மணிக்கட்டில் ராக்கி கயிறுகளை கட்டினர். இதனால் அவரது கை முழுவதும் ராக்கி கயிறுகளாக காட்சியளித்தன. சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டியதாக கான் தெரிவித்துள்ளார். மேலும், இது உலக சாதனை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறது.