தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு படித்து வரும் 14 வயது மாணவியிடம் அங்கு ஆசிரியராக பணியாற்றும் எஸ்.மோகன் ரவி (58) என்பவர் கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகன் ரவி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோகன் ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.