பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் கல்யாணரல் பகுதியில் வசித்து வருபவர் விஜயா இவர் சிறுவாச்சூர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் இன்று காலையில் 10 மணி அளவில் வீட்டிலிருந்தே வெளியே வந்த போது பின்னே நின்று கொண்டிருந்த முகக்கவசம் அணிந்திருந்த ஆண் நபர் ஒருவர் விஜயாவின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் செயினை பறித்த போது கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கத் தாலிக்கொடி விஜயா கையில் 3 பவுன் திருடன் கையில் 7 பவுன் பிடுங்கிச் சென்று மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து மற்றொரு உடன் வண்டியில் ஏறி பெரம்பலூர் நோக்கி சென்று விட்டார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி மாவட்ட காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று நாட்களாகவே இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் காவல்துறையினர் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.