மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு சொத்து வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி என பல்வேறு இனங்களில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.21கோடி வரி விதிக்கப்படுகிறது.இதில் சொத்து வரி மட்டும் ரூ.8. கோடிஆகும்
ஆனால் இது வரை சொத்து வரியில் வசூலானது ரூ.3 கோடி மட்டுமே. ஏற்கனவே பாக்கி உள்ள நிலுவையையும் சேர்த்துமொத்தம் ரூ.7 கோடி சொத்து வரி பாக்கி நிலுவையில் உள்ளது.
இப்படி வரி வசூலாகாமல் உள்ளதால் பாதாள சாக்கடை சீரமைப்பு, சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நகராட்சியில் நிதி பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை நகராட்சிக்கு சொத்து வரி, அதிக அளவில் நிலுவையில் வைத்துள்ளவர்களை அழைத்து நேற்று நகராட்சி ஆணையாளர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த நகராட்சி அதிகாரிகள் நிலுவையின்றி வரிகளை செலுத்த அறிவுறுத்தினர். விரைவில் பாக்கி வரிகளை செலுத்தாவிட்டால் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.