சொத்து வரி எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைபடி சொத்து வரியை உயர்த்துவதில் தவறில்லை என தெரிவித்த சென்னை கோர்ட்டு, சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சி இணையளதளங்களை மேம்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.