ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் நிறுவன அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது. அடிக்கல் நாட் டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்றைய தினம் டாடா நிறுவன வாகன உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டில் தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்துவதில் நீங்கள் எப்படி பெருமை படுகிறீர்களோ, அதுபோல நாங்களும் பெருமை, மகிழ்ச்சி அடைகிறோம். உலகின் தொழில் தொடங்குவோருக்கான முதல் முகவரி தமிழ்நாடு தான்.
இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் டாடா நிறுவன எக்கு, தகவல் தொழில் நுட்பம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல தொழில்களில் தடம் பதித்துள்ளது .டாடா குமும தலைவர் சந்திரசேகரன். இங்கு வந்துள்ளார். அவர் நாமக்கல்லை சேர்ந்தவர். அவரது உயர்வுக்கு காரணம் அறிவாற்றல், தன்னம்பிக்கை தான் காரணம். அவர் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். அவர் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார்.
டாடா மோட்டார்ஸ் பல நாடுகளில் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நல்லுறவு மேலும் வளரும் .அதற்கான முக்கியமான நாளாக இன்று விளங்குகிறது.
ராணிப்பேட்டையை தேர்வு செய்ததற்கு நன்றி. விரைந்து திறப்பு விழா நடத்த வேண்டும். தமிழ்நாடு எங்கள் மாநிலம் மட்டும் அல்ல. உங்கள் மாநிலம். எனவே இங்கு கூடுதல் முதலீடுகளை செய்யுங்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி. என்ற வகையில் இங்கு தொழில் தொடங்கியது மகிழ்ச்சி. தலைவர் கலைஞர் ஆட்சியில் முதல் சிப்காட்டை ராணிப்பேட்டையில் தான் தொடங்கினார். வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு தான். இந்தியாவில் விற்பனையாகும் மின்சார வாகனங்களில் 40 விழுக்காடு தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. . நிதி அயோக் கொடுத்த சான்றுபடி தமிழ்நாடு தான் நம்பர் ஒன்.
. அனைவரையும் உள்ளட்க்கிய வளர்ச்சி. தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் இருந்து தனித்து உள்ளது. தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்க வேண்டும். 2030க்குள் 1 டிரிலியன் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். அதற்கு சான்று தான் இந்த விழா. மார்ச் மாதம் புரிந்துணவு போடப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். டாடா குழுமத்தின் 15 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது. ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது.சந்திரசேகரன் மேலும் பல புதிய தொழிற்சாலை இங்கு கொண்டு வருவார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், டிஆர்பி ராஜா,, டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆலை வளாகத்தை முதல்வர் ஸ்டாலின் சுற்றிப்பார்த்தார்.