புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மார்க் தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர் பாரதி மற்றும் மாநில அமைப்பாளர் மாவட்ட செயலாளர் எஸ்.செளமியாமூர்த்தி தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் அதிகமான டாஸ்மார்க் ஊழியர்கள் கலந்து கொண்டனர். டாஸ்மார்க் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் , மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் வழஞ்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.