வரும் 28 ம் தேதி அன்று மிலாடி நபி(வியாழக்கிழமை) மற்றும் அக்டோபர் 2 அன்று காந்திஜெயந்தி (திங்கள் கிழமை) ஆகிய 2 தினங்களும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள்அனைத்தும் மூடப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கும். மேற்படி தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.