திருச்சி அருகே
டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாப பலி
திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்து உள்ளார் .அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவரது உடல் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் அருள்ஜோதி வழக்கு பதிவு செய்து முதியவர் யார் ?எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்