மதுரை மாவட்டம், பெரிய பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி என்பவருடைய மகன் மாரிமுத்து(21/24) என்பவர் டாஸ்மாக் கடை திருட்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்படி மாரிமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மாரிமுத்து மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி, கீழப்பழூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜீவ்காந்தி கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜின் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா மாரிமுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.அதன் அடிப்படையில்மாரிமுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அதற்கான ஆணை பிரதிகள் திருச்சி மத்தியச்சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.
