Skip to content

திருச்சி… டாஸ்மாக் பார் கடையை உடைத்து பொருட்கள் திருட்டு

  • by Authour
டாஸ்மாக் பார் கடை உடைத்து, பொருட்கள் திருட்டு திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் தமிழக அரசின் டாஸ்மார்க் பார் உள்ளது.இந்த நிலையில் பாறை டாஸ்மாக் மேலாளர் வீரமணி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் இந்நிலையில் நேற்று டாஸ்மாக் பாறை திறக்க வந்தபோது மர்ம சாமிகள் யாரோ கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த ஸ்மார்ட் டிவி, யூபி எஸ் மற்றும் பேட்டரி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து வீரமணி கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகார் என்பெயர் போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் மாதிரி டிவி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற வர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர். டூவீலர் திருடன் கைது… திருச்சி ஜீவா நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ஹர்ஷதுல்லா ( வயது 27) இவர் கடந்த 25 ந்தேதி தனது வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் மறுநாள் காலை மர்ம ஆசாமி யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருச்சி தென்னூர் பகுதியில் சந்தேகத்கிடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி தென்னூர் சென்ட்ரல் பஜாரை சேர்ந்த இர்ஷாத் பாபு (வயது 32) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் தான் ஹர்ஷதுல்லா மோட்டார் சைக்கிள்யை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டை குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இர்ஷாத் பாபுவை கைது செய்து திருடிய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.
error: Content is protected !!