அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்த போது, அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வந்த கீழப்பழுவூர் டாஸ்மாக்கில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சுந்தர்ராஜ் கொண்டு சென்ற 9 லட்சத்தி 93 ஆயிரத்து 250 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் எடுத்துச் சென்ற பணம் 6 மற்றும் 7
ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் மதுபானங்கள் விற்பனை செய்த தொகை என கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஒப்படைத்தனர். உரிய ஆதாரங்களை தேர்தல் செலவீண குழுவிடம் சமர்ப்பித்து பணத்தை மீண்டும் வாங்கி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.